செய்திகள்

காளஹஸ்தி பைப்ஸ் உற்பத்தி விரிவாக்கம் மத்திய மாநில அரசு குடிநீர் கழிவு நீர் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

Spread the love

சென்னை, நவ. 8–

மத்திய – மாநில அரசுகள் குடிநீர், கழிவு நீரகற்றும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை வேகமாக நிறைவேற்றி வருகிறது. இதனால் குடிநீர், கழிவுநீர் பைப் தேவை அதிகரித்துள்ளது.

ஸ்ரீ காளஹஸ்தி பைப்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 5 லட்சம் டன், தேனிரும்பு குழாய்கள் தயாரிக்க விரிவாக்கம் செய்ய உள்ளது. இதற்கான திட்டம் இயக்குனர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டது என்று இதன் முழு நேர இயக்குனர் ஜி.எஸ். ரதி தெரிவித்தார்.

ஸ்ரீ காளஹஸ்தி பைப்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2வது காலாண்டில் ரூ.57.16 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் மொத்த ரூ.46.29 கோடி. இதன் நிகர லாபம் ரூ.33.26 கோடியிலிருந்து ரூ.35.91 கோடியாக அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிந்த அரையாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் ரூ.50.55 கோடியிலிருந்து ரூ.59.28 கோடியாக 37% அதிகரித்துள்ளது. தொடர்ந்து வர்த்தகம் அதிகரித்து லாபம் உயரும் என்றும் ரதி நம்பிக்கை தெரிவித்தார். இதன் விரிவாக்க திட்டங்களுக்கு யந்திரங்கள் வாங்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வேகமாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *