செய்திகள்

சேலையூரில் 17–ந் தேதி ஸ்ரீ ராகவேந்திரரின் ‘‘புது மந்திராலயம்’’ கும்பாபிஷேகம்

Spread the love

சென்னை, நவ. 14

சேலையூரில் 17 ந் தேதி ஸ்ரீ ராகவேந்திரரின் ‘‘புது மந்திராலயம்’’ எனும் மூலமிருத்திகா பிருந்தாவன பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா மந்திராலய பீடாதிபதி சுபதீந்திர தீர்த்தர் தலைமையில் நடைபெறுகிறது.

சென்னை சேலையூர், பாரத் பல்கலைக்கழகம் பின்புறத்தில் உள்ள மகாதேவன் நகரில் ஸ்ரீ மத்துவாச்சாரிய மூல மகா சமஸ்தானம் நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் கிளையாக ‘‘புது மந்திராலயம்’’ எனும் ஸ்ரீ ராகவேந்திரர் மூலமிருத்திகா பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராகவேந்திரரின் மூல மிருத்திகா பிருந்தாவன பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் 17 ந் தேதி காலை 10 மணிக்கு மந்திராலயம் நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திரர் மடம் பீடாதிபதி ஸ்ரீ சுபதீந்திர தீர்த்தர் தலைமையில் நடைபெறுகிறது.

இதையொட்டி 15 ந் தேதி எம்கேஎஸ் நடராஜன், மணிகண்டன் குழுவினரின் நாதஸ்வர கச்சேரியும், அன்னதானமும் நடைபெறும். 16 ந் தேதி காலை 6 மணிக்கு பிரதிஷ்டை ஹோமம், மாலை 5.30 மணிக்கு சுபதீந்திர தீர்த்தர் வரவேற்பும், 6.45 மணிக்கு திருவள்ளூர் கிருந்தாலய ஸ்தாபகரும், ராகவேந்திரர் மகிமை நூலாசிரியருமான அம்மன் சத்தியநாதனின் மகள்கள் சென்னை சகோதரிகள் வேதிகா, ஐஸ்வர்யா வழங்கும் பக்தி பாடல்கள் நிகழ்ச்சியும், ஸ்ரீ சாய் கலாலயா குழுவின் நடன நிகழ்ச்சியும், 8.30 மணிக்கு சுவாமிகள் அருளுரையும் நடைபெறுகிறது.

விழாவில் அகில உலக ராகவேந்திரர் பக்தி இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகரும், தாம்பரம் நகர்மன்ற முன்னாள் தலைவருமான ம.கரிகாலன், அப்த காரியதர்சி எச்.எச்.ஸ்ரீ சுவாமிஜீ ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *