செய்திகள்

சிறப்பு பஸ் நிலையங்களுக்கு செல்ல 310 சிறப்பு இணைப்பு பஸ்கள் 24 மணி நேரமும் இயக்கம்

Spread the love

சென்னை, ஜன.11

பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு சிறப்பு முன்பதிவு செயலறைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 9 ந் தேதி கோயம்பேடு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

சென்னையிலிருந்து 10, 11, 12, 13 மற்றும் 14.1.2020 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ள 16,075 பேருந்துகளில் 10 ம் தேதி 2,225 பேருந்துகளும், 11 ம் தேதி 2,225 பேருந்துகளும், 12 ம் தேதி 3,875 பேருந்துகளும், 13 ம் தேதி 3,875 பேருந்துகளும், 14 ம் தேதி 3,875 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 9,995 பேருந்துகள் என ஆக மொத்தம் 30,120 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் நாளை (12 ந் தேதி), 13 ந் தேதி, 14 ந் தேதி ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் பின்வரும் பேருந்து நிலையங்களிலிருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்

2. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்

3. பூவிருந்தமல்லி பேருந்து நிலையம்

4. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு)

5. கே.கே.நகர் பேருந்து நிலையம்

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து மேற்குறிப்பிட்ட பேருந்து நிலையங்கள், பகுதிக்கு மாநகர பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகள் 10 ந் தேதி முதல் 12, 13, 14 ந் தேதி ஆகிய 3 நாட்களில் 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது. மேலும் வழிதவறிய பயணிகள் உரிய பேருந்து நிலையங்களுக்கு சென்றடைந்திடும் வகையிலும் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *