செய்திகள்

325 நெசவாளர்களுக்கு பொங்கல் போனஸ் : மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் வழங்கினார்

திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில்

325 நெசவாளர்களுக்கு பொங்கல் போனஸ்:

மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் வழங்கினார்

காஞ்சீபுரம், ஜன. 6

காஞ்சீபுரத்தில் உள்ள திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பேர் வந்து கண்கவர் தூய ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய பட்டுச் சேலைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இந்த கூட்டுறவு சங்கத்தின் நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் மேட்டுத்தெரு பள்ளிகூடத்தான் தெருவில் அமைந்துள்ள சங்க கட்டிட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்க தலைவரும், அண்ணா தி.மு.க. நிர்வாகியுமான கே.வாசு தலைமை வகித்தார். இதில், காஞ்சீபுரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோம சுந்தரம் கலந்து கொண்டு 325 நெசவாளர்களுக்கு ரூ.15,80,657 போனஸ் தொகையை வழங்கி அவர்களை வெகுவாக பாராட்டினார். இச்சங்கத்தில் 2019 2020-ம் ஆண்டின் லாபம் ரூ.31 லட்சத்து 66 ஆயிரம் ஆகும். தொடர்ந்து வி.சோமசுந்தரம் பேசுகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நெசவாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் நெசவாளர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கியது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று அண்ணா தி.மு.க. மீண்டும் கோட்டையில் அமருவது உறுதி என்றார். இந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி காஞ்சீ பன்னீர்செல்வம், மாவட்ட கழக அவைத்தலைவர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோம சுந்தரம், பொரு ளாளர் வீ. வள்ளி நாயகம், பாசறை செயலாளர் வி.ஆர். மணி வண்ணன், பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் வி.பாலாஜி, அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கோல்டு ரவி, அம்மா பாலு, சங்க துணைத்தலைவர் ஜரிகை வி.ரவி, இயக்குநர்கள் சி.முனுசாமி, தங்கவேல், வேதாச்சலம், வசந்தா, ருக்மணி, காஞ்சீ நகர செயலாளர் என்.பி.ஸ்டாலின், பொருளாளர் பி.ஏ.ராஜசிம்மன் மற்றும் நெசவாளர் கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *