வர்த்தகம்

காட்டாங்கொளத்தூர் அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை: வேர்ல்ட் விஷனுடன் இணைந்து ரொனால்ட் நிசான் நிறுவுகிறது

சென்னை, அக். 16

காட்டாங்கொளத்தூரில் உள்ள 5 பஞ்சாயத்து அரசு பள்ளிகளில் டிஜிட்டல் வகுப்பறை, சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிவறை ஆகியவற்றை ரொனால்ட் நிசான் கார் நிறுவன சார்பு நிறுவனம், வேர்ல்ட் விஷன் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து நிறுவுகிறது.

கொளத்தூர் தொடக்கப்பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை தொடங்கி வைக்கப்படுவது குறித்து வேர்ல்ட் விஷன் இந்தியாவின் இயக்குனர் – சோனி தாமஸ் பேசுகையில், வசதி குறைவான மற்றும் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்குவது என்ற எமது கோட்பாடுகள் மற்றும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை அமைகிறது. கல்வி என்பது, திறனதிகாரத்தை ஏதுவாக்கும் ஒரு உரிமை மற்றும் அனைத்து குழந்தைகளும் தரமான கல்விக்கு உரிய அணுகுவசதியை கொண்டிருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். குழந்தைகள் மட்டுமல்லாது, அவர்களது ஒட்டுமொத்த குடும்பங்களின் வாழ்க்கையையுமே கல்வி மாற்றியமைக்கும் மற்றும் அவர்களுக்கு திறனதிகாரத்தை வழங்கும் என்று கூறினார்.

ரொனால்ட் நிசான் சார்பு நிறுவன மேலாண்மை இயக்குனர் கிருஷணன் சுந்தரராஜன் பேசுகையில், சுகாதாரம், பாதுகாப்பு, வறுமையொழிப்பு, சமூக வர்த்தகம், சுற்றுச்சூழல் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பல்வேறு செயல் நடவடிக்கையில் எங்கள் சமூக நல குழுக்கள் ஆர்வத்தோடு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *