வாழ்வியல்

அறுவை சிகிச்சைக்கு உதவும் மிகச் சிறிய ஒளி உணரிகள்!

Spread the love

மிக நுண்ணிய அறுவை சிகிச்சைகளுக்கு, மிகச் சிறிய ஒளி உணரிகள் உதவுகின்றன. உடலுக்குள் குழாயை செலுத்தி, அதன் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கு துல்லியமான கேமராக்கள் தேவை. அந்த கேமராக்களில் இருக்கும் ஒளி உணரிகள் தான் உடலின் உறுப்புகளை, மருத்துவர்கள் துல்லியமாக பார்க்க உதவுகின்றன.

‘இமேஜ் சென்சார்’ எனப்படும் ஒளி உணரிகள் அடர்த்தியாக இருந்தால் தான், படக் காட்சிகள் துல்லியமாக இருக்கும். இதற்காக அண்மையில், உலகிலேயே மிகச் சிறிய ஒளி உணரியை தயாரித்துள்ளது ஓம்னி விஷன் நிறுவனம். இதன் ஓவி6948 என்ற கருவியை, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், உலகின் மிகச் சிறிய ஒளி உணரியாக இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *