வாழ்வியல்

அதிகமான உடல் எடையை குறைக்கும் எளிய வழிகள்!–2

Spread the love

பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உயர் பிரக்டோஸ் போன்ற சேர்க்கைகள் உள்ளன. இது உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி கூடுதல் எடை அதிகரிக்கும். சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட மற்றும் ஆயத்த உணவை உட்கொள்வதைக் தவிர்ப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

அதே நேரத்தில் முழு தானியங்கள் மற்றும் பிற உயர் ஃபைபர் உணவுகளை உண்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவை ஒரு நபரின் எடை குறைக்க உதவும். உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள்.

நீர்ச்சத்துள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வந்தால், நிச்சயம் உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். விறுவிறுப்பாக நடப்பது, நீச்சல் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வது, லிஃப்ட் பயன்படுத்துவதற்கு பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துவது உதவும்.

உடல் எடையை குறைப்பதற்கும், மெலிதான உடல்வாகை கொள்வதற்கும் சந்தையில் பல மருந்து பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. ஆனால் இவை யாவுமே நிரந்தர தீர்வை கொடுக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால், ஒன்று மட்டும் உறுதி. சில மருந்துகள் பக்கவிளைவுகளை உடலுக்கு தரும்.

ஆகையால் இயற்கையாக கிடைக்கும், பல ஆதாரங்களை கொண்ட குறிப்பாக குடம் புளி அல்லது மலபார் புளி எனப்படும்‘கார்சினியா கம்போஜியா மற்றும் அவரை விதை வகைகளில் ஒன்றான ‘கிட்னி பீன்ஸ்’ போன்றவைகளால் தயாரிக்கப்பட்ட உணவுகளை எடுத்துக் கொண்டால் எல்லா நோய்களுக்கும் அதிலும் குறிப்பாக, ‘நீரிழிவு’ நோய் உள்ளவர்கள் மற்றும் உடல் எடை அதிகமாக உள்ளவரும் இதனை உட்கொண்டால் உடல் எடை குறைதல் மட்டுமின்றி உடலை அழகாவும், மெலிதாகவும் வைத்து கொள்ள முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *