வர்த்தகம்

55 டன் ‘‘சிக்னா’’ டிரெய்லர் லாரி: டாடா மோட்டார்ஸ் அறிமுகம்

சென்னை, அக்.9

முன்னணி வணிக வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் மிக உயர்ந்த டிரெய்லர் லாரி சிக்னா 5525ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது 55-டன் சுமப்பதால் வாடிக்கையாளர்களுக்கு லாபத்தை வழங்குகிறது. மேம்பட்ட செயல்திறன், குறைவான செலவு, அதிக சொகுசு வசதி ஆகியவற்றைக் கொண்டு இந்த மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 250 எச்பி ஆற்றல் திறன் கொண்டது. கியூமின்ஸ் 6.7 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சோர்வற்ற பயணம் மற்றும் குறைவான இயக்க நேரம் காரணமாக அதிகப் பயணங்கள் மற்றும் உயர் வருவாயை உறுதி செய்கிறது.

இதில் 3 தனித்துவமான டிரைவ் முறைகள் உள்ளன லைட், மீடியம் மற்றும் ஹெவி.இந்த புதிய மாடல் பிரபலமான சிக்னா கேபினுடன் கிடைக்கிறது, இது நாட்டின் அதிகம் விற்பனையான மாடல் ஆகும்.

யந்திர ரீதியாக சரி செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, விசாலமான ஸ்லீப்பர் பெர்த், விருப்பப்படும் கோணத்தில் ஸ்டீயரிங்கை சரி செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *