சினிமா செய்திகள்

‘கபடதாரி’ சிபிராஜ் : தனஞ்ஜெயன் பட ஆடியோ வெளியீடு

‘கபடதாரி’ சிபிராஜ் நாயகன். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி – டைரக்டர். டாக்டர் ஜி.தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பாளர்கள் (கிரியேட்டில் என்டர்டைனர்ஸ்).

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, பிரசாத் ஸ்டூடியோவில் நடந்தது. சிபிராஜ் தனக்கு ஏற்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருப்பது இதன் சிறப்பு என்று பங்கேற்ற நடிகர் – தயாரிப்பாளர் ஜெ. சதீஷ், இசையமைப்பாளர் சைமன், எடிட்டர் பிரவீன், நடிகர் ஜெயபிரகாஷ், நந்திதா, பாடலாசிரியர்கள் கார்த்திக், அருண் பாரதி, தயாரிப்பாளர் டி.சிவா (அம்மா கிரியேஷன்ஸ்), விஜய் ஆண்டனி ஆகியோர் பாராட்டினார்கள்.

‘கபடதாரி’ யார்? இது கதையின் கரு. படத்தின் சிறப்பையும், சிபிராஜ் – டைரக்டர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி ஒத்துழைப்பையும் மனம் திறந்து பாராட்டினார் தனஞ்ஜெயன். வந்திருந்தவர்களை ‘டி ஒன்’ சுரேஷ்சந்திரா குழுவினர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *