சிறுகதை

கேட்டதைக் கேட்பவனிடமே கொடு | ராஜா செல்லமுத்து

Spread the love

தினமும் சாப்பாடு சாம்பார், கூட்டுப் பொரியலென சாப்பிட்டுச் சாப்பிட்டு வாய் சப்பென்று ஆன பரணிக்கு அன்று மதியம் வேறு எதையோவது நல்லதாகச் சாப்பிடலாமென எண்ணம் வந்தது.

‘‘ம்..ம் என்ன சாப்பிடலாம்? யோசனையின் முனையில் அவன் புத்தியில் சட்டென உறைத்தது பிரட் ஆம்லேட் .

‘‘சரி இன்னைக்கு இதையே சாப்பிடலாம்’’ என்று முடிவு செய்து பிரட் ஆம்லேட் போடும் இடத்திற்கு விரைந்தான்.

போகும் வழிநெடுகிலும் கார் வண்டிகளைக் கடந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

‘‘என்ன இது! டீக்கடை மாதிரி வரிசையா இவ்வளவு கடைகள் வச்சிருக்காங்க. சின்னச்சின்னதா கடைகள் இருக்கே. அதுவும் அத்தனையும் பிரட் ஆம்லேட் கடைகள். கண் முன்னிருந்த கடைகளை உற்று நோக்கினான். வரிசையாகக் கடைகள். எங்க போகலாம் எங்க போனாலும் எவனும் நம்ப ஆளுக இல்ல. இவனுகள பாத்தாலே தெரியுது அத்தனையும் வெளியூர்க்காரனுக. நம்ம ஊர்ல இருக்கிற ஆளுகளுக்கு வேல வெட்டி இல்ல.. இங்க வந்து அத்தனை பேரும் பொழச்சிட்டு இருக்கானுக. ம்..ம் வேற வழியில்ல. இவனுக கிட்ட தான் சாப்பிடிடணும் போல’’ என்று பரணி வரிசையாக இருந்த  கடைகளில் ஒரு கடைக்குப் போனான் . அங்கிருந்தவன் பேசும் மொழி பரணிக்கு இன்னதென்று தெரியாமல் இருந்தது.

‘‘என்ன பேசுறான் இவன்..? எதுவும் புரிய மாட்டேங்குதே சரி நமக்கு எது தேவையோ அத கேட்டு வைப்போம்’’ என்ற பரணி பிரட் ஆம்லேட் என்று சொல்ல

‘‘கியா.. கியா..’’ என்று சொல்லி பிரட்டை பிளாஸ்டிக் ஒழிப்பை மீறி அதிலிருந்த பிரட்டை எடுத்து முட்டையை உடைத்து சூடான கல்லில் போட்டு பிரட்டை முன்னும் பின்னும் புரட்டி அதில் பச்சையாய் எதையோ தடவி அப்படி இப்படி புரட்டிப்போட்டு ஒரு பேப்பரில் வைத்துக்கொடுக்க

‘‘ஐயா.. என்று ஒரு குரல்கேட்டது

‘‘என்ன.. இது! ஒரு பிரட் சாப்பிட விடமாட்டானுக போல’’ என்று சலித்தபடியே அந்தப் பிச்சைக்காரரை விட்டுத் தள்ளி நின்று பிரட் ஆம்லேட்டைப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தான். அவன் பிய்த்து ஒரு வாய் வைப்பதற்குள் மீண்டும்

‘‘ஐயா..’’ என்ற குரல் கேட்க பரணியின் முகம் ‘‘சுர்’’ எனச் சுருங்கியது.

‘‘இந்த ஊர்ல எதுவெல்லாமோ குறையுது. ஆனா இது மட்டும் தான் இன்னும் போகமாட்டேன்குது’’ என்று சலித்தவன்.

அந்தப் பிச்சைக்காரனின் முகத்தைப் பார்க்காமலே பிரட் ஆம்லேட்டைப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தான். அவன் பையில் எவ்வளவோ பணமிருந்தாலும் அவன் மனதில் ஏதோ ஒரு நெருடல் பிச்சைக்காரருக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்க மனம் இல்லாமல் சாப்பிட்டுக்கொண்டே இருந்தான். கேட்டுக்கேட்டுப் பார்த்த பிச்சைக்காரர் பரணியை விட்டு விலகினார்.முழு பிரட்டையும் சாப்பிட்ட பரணி ‘‘ஏவ்..’’ என்று ஒரு ஏப்பத்தையும் விட்டு அந்த இடத்ததைவிட்டு நகர்ந்தான்.

‘‘என்ன வயிறு நிறையாதது மாதிரி இருக்கே. ஒரு பழம் வேணும்னா சாப்பிடலாமா..?’’ என்று சிந்தித்தவன் அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் பழம் வாங்கி அதை உரித்து வாயில் வைத்த போது ‘‘பொத்’’ எனக் கீழே விழுந்தது.

‘‘ஐயய்யோ என்ன இது பழம் கீழ விழுந்திருச்சே’’ சார்.. இந்த பழம் எவ்வளவு? என்று மறுபடியும் கடைக்காரரிடம் கேட்க ‘‘அஞ்சு ரூவா..’’ என்று கடைக்காரர் சொல்ல இன்னொரு பழத்தைப் பிய்த்துத்தின்ன ஆரம்பித்தேன். ரெண்டு பழம் அப்பிடின்னா பத்து ரூவா

அஞ்சு ரூவா கீழ விழுந்திருச்சு’’ என்று நினைத்த போது கொஞ்ச நேரத்திற்கு முன்னால் தன்னிடம் பிச்சை கேட்ட பிச்சை கேட்ட பிச்சைக்காரர் பரணியைக் கடந்து செல்ல

‘‘ஆகா இந்தப் பிச்சைக்காரனுக்கு கூட அஞ்சு ரூவா குடுத்திருக்கலாமோ? அவன் விட்ட சாபமா கூட இது இருக்குமோ..? என்று நினைத்தவன் அவர் ‘‘ஐயா.. ஐயா..’’ என்று கூப்பிட்டுக் கொண்டே போக பிச்சைக்காரரைக் கூப்பிட்ட பரணி அவர் கையில் ஒரு பத்து ரூபாய் தாளைத் திணித்தான். அப்படி அவனாகக் கொடுத்தது அவன் நெஞ்சில் இன்னொரு இழப்பிற்கான தடம் உடைந்ததாக உணர்ந்தான்.

கேட்டதைக் கேட்பவனிடமே கொடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *