செய்திகள்

ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பற்றிய அதிர்ச்சி தகவல்: மக்கள் வேதனை

* பார்க்கின்சன் நோயால் அவதிப்படுகிறார்

* நடக்க, நீண்ட நேரம் உட்கார சிரமப்படுகிறார்

ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை பற்றிய அதிர்ச்சி தகவல்:

மக்கள் வேதனை

மாஸ்கோ, நவ.22-

ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து, அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளியாகி வருவது ரஷ்ய மக்களை பெரும் கலக்கமடையச் செய்துள்ளது.

“புதின் சமீபகாலமாக பார்க்கின்சன் எனப்படும் மூளையின் ஒருபகுதி சிதைவுக்கு உள்ளாகும் நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறார். இந்த நோயின் காரணமாக வெளியுலகில் முகம் காட்டுவதை அவர் தவிர்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக கால் மற்றும் கைகளில் கடுமையான வலியால் புதின் அவதிப்படுகிறார்.

இதனால் புதின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலக திட்டமிட்டு வருகிறார். அவரின் மகள்கள், 37 வயதான காதலியின் அறிவுறுத்தலின்பேரில் அவர் தனது ராஜினாமாவை செய்வார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குறித்து சில வாரங்களுக்கு முன், மாஸ்கோவை சேர்ந்த பிரபல அரசியல் விமர்சகரும், மாஸ்கோ ஸ்டேட் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் ரிலேஷன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான வலேரி சோலோவி தெரிவித்திருந்தார்.

இதே தகவல்களை முன்னணி ஊடகங்களும் வெளியிட்டு இருந்தன. இதற்கேற்ப அண்மையில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்ட புதின், அடிக்கடி இருமி கொண்டிருந்தார். மேலும், நாற்காலியில் அமரும்போது கைகளில் வலி ஏற்பட்டது போல, ஓர் உணர்வுடன் அமர்ந்திருந்த வீடியோ காட்சிகள் வைரலானது.

மேலும் வலேரி சோலோவி, இங்கிலாந்து ஊடகமான ‘டெய்லி மெயில்’ (Dailymail) பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் புதினுக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளார்.

கிரெம்ளின் மாளிகை மறுப்பு

மேலும் பார்க்கின்சன் நோய் நரம்பியல் மண்டலத்தை பாதித்துள்ள தால், புதின் தற்போது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை தவிர்த்து வருவதாகவும் இதனால், பதவி விலக திட்டமிட்டிருக்கும் புதின் தனது இரண்டு மகள்களில் ஒருவரான கேடரினா டிகோனோவாவை அதிபராக்கவும் திட்டமிட்டு வருகிறார்” என்றும் வலேரி சோலோவி பேசியுள்ளார்.

உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதின் பதவி விலக உள்ளார் என்ற தகவலை, ரஷ்யாவின் அதிபர் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை முற்றிலும் மறுத்துள்ளது. ஆனால், அவரின் உடல்நிலை குறித்து பேச மறுத்துவிட்டது. அதனால் என்ன நடக்கிறது என்பது அறியாமல் புலம்பி வருகின்றனர் ரஷ்யர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *