செய்திகள்

மஹா சிவராத்திரி: காஞ்சீபுரம் குரு புக் சென்டரில் சிவபுராணம் புத்தகங்களால் லிங்கம் வடிவமைப்பு

Spread the love

காஞ்சீபுரம், பிப்.20 –

மஹா சிவராத்திரி நாளை வருகிறது. அதையொட்டி காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது.

மேலும் காஞ்சீபுரம் இரட்டைமண்டம் அருகில் உள்ள குரு புக் சென்டரில் சுமார் 100க்கும் மேற்பட்ட சிவபுராணம் பக்தி புத்தகங்களை சிவபெருமான் போல் லிங்கம் வடிவமைத்து, பூ மாலைகள் சாற்றப்பட்டு, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.

இந்த புக் சென்டருக்கு ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் வருகை வந்து புத்தகங்களால் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கத்தை பார்த்து வழிபட்டு சென்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை குரு புக் சென்டர் அதிபர் கார்த்திகேயன் செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *