செய்திகள்

‘கார்பன்டை ஆக்சைடு வெளியேறுவதைக் குறைத்து உலகிலேயே முதல் முன்மாதிரி மின் நிலையம் உருவாக்கப்படும்’’

Spread the love

வேலூர், டிச. 4

சென்னை வி.ஐ.டியில் நடந்த கருத்தரங்கில் ‘‘கார்பன்டை ஆக்சைடு வெளியேறுவதைக் குறைத்து உலகிலேயே முதல் முன்மாதிரி மின் நிலையம் உருவாக்கப்படும்’’ என்று இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் தெரிவித்தார்.

பிளாஸ்மா அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த 4 நாள் 34 வது தேசிய மாநாடு சென்னை வி.ஐ.டி.யில் நேற்று துவங்கியது. வி.ஐ.டி. துணை தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். செயிண்ட் கோபைன் செக்குரிட் இந்தியா லிமிடெட் மேலாண்மை இயக்குனர் தினகர் கவுரவ விருந்தினராக பங்கேற்றார்.

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் ஏ.கே. பாதுரி கலந்து கொண்டு கருத்தரங்க மலரை வெளியிட வி.ஐ.டி துணை தலைவர் சேகர் விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஏ.கே. பாதுரி பேசுகையில், இந்திய நிலக்கரியை வைத்து 710 முதல் 720 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில், 310 கிலோ அழுத்தம் மற்றும் செயல்திறன் 50% க்கு உயர்த்துவதோடு உமிழ்வை 25% குறைத்து ஒரு வெப்ப மின் நிலையத்தை இயக்குவதற்கான தொழில்நுட்பம், பெல் மற்றும் என்டிபிசி உடன் தயாரித்துள்ளது. அதை பிரதமரின் அலுவலகத்தால் நேரடி மேற்பார்வையில் நிதி உதவி பெற்று, ஒரு முன்மாதிரி ஆலையை அமைக்க உள்ளோம். இது உலகிலேயே முதல் முன்மாதிரி மின் நிலையமாக விளங்கும். எதிர்கால தலைமுறையினருக்கான தூய்மையான உலகத்திற்காக நாம் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும் என்றார்.

வி.ஐ.டி. துணை வேந்தர் டாக்டர் ஆனந்த ஏ. சாமுவேல் வி.ஐ.டி சென்னை இணை துணை வேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *