செய்திகள்

புதுவையில் அண்ணாதிமுகவுக்கு 4 இடம்; பாஜகவுக்கு 10 சீட்: என்.ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதி

புதுவை, மார்ச்.10 –

என்.ஆர் காங்கிரஸ் – அண்ணாதிமுக – பாஜக கூட்டணியில் புதுவை மாநில அண்ணாதிமுகவுக்கு 4 இடம்; பாஜகவுக்கு 10 சீட்: என்.ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதி என தொகுதிபங்கீடு செய்துகொண்டனர். யார்யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பதற்காக பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் அண்ணாமலை ஓட்டலில் நடைபெற்ற என்.ஆர் காங்கிரஸ்ஊழியர் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளராக என்.ரங்கசாமியை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திரா காந்தி சிலை அருகே பாஜக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.அந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜகவின் மத்திய தேர்தல் பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா ,‘‘அண்ணாதிமுகவுக்கு 4 இடம்; பாஜகவுக்கு 10 சீட்:

என்.ஆர் காங்கிரசுக்கு 16 தொகுதி என தொகுதிபங்கீடு செய்துகொண்டிருக்கிறோம்.எங்கள் கட்சியின் புதுவை தலைவர்களான நமச்சிவாயம், சாமிநாதன் ஆகியோர் அனுபவத்தைப் பயன்படுத்தி தீவிர பிரச்சாரம் செய்து சீர்கெட்ட புதுவை சீராக வளர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் ’’ என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *