வாழ்வியல்

இதய நோய் வராமல் தடுக்கும் ; வியக்க வைக்கும் நல்லெண்ணெயின் மருத்துவ குணங்கள்

நல்லெண்ணெய் என்பது – எள் என்னும் தானியத்திலிருந்து பெறப்படும் நெய்யாகும்.

எள் மற்றும் தேவையான சரக்குகளை பொடித்து பக்குவமாக ஆட்டி எடுப்பதே நெய் ஆகும். எள் நெய் என்பதே காலப்போக்கில் மருவி எண்ணெய் ஆனது.

(எள் + நெய் = எண்ணெய்).

எண்ணெய் என்பது எள் மற்றும் நெய் ஆகிய இரண்டு சொற்களின் கூட்டுச் சொல்லாகும் (எள் + நெய் = எண்ணெய்). இது எள்ளிலிருந்து எடுக்கப்படும் நெய்யையே குறிக்கும். எனினும் எண்ணெய் என்ற சொல் எல்லா நெய்களையும் குறிக்கும் பொதுச் சொல் ஆகிவிட்டதனால், எள்ளின் நெய்யைக் குறிக்க நல்லெண்ணெய் என்ற சொல் காலப்போக்கில் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நல்லெண்ணெய் உணவுப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் மற்றும் மசாஜ் செய்வதற்கும் பயன்படுகிறது.

நல்லெண்ணெய்:தென்னிந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் இதுதான்.

தற்போதும் பல்வேறு கிராமப்புறங்களில் நல்லெண்ணையில் சமைக்கும் முறை பழக்கத்தில் உள்ளது. அதில் பல்வேறு மருத்துவக் குணங்கள் உள்ளன. 1. ஆரோக்கிய இதயம் ஆரோக்கிய இதயம்

நல்லெண்ணெயில் சீசேமோல் (sesamol) என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *