செய்திகள்

நாடு முழுக்க காவல் நிலையங்களில் சிசிடிவி: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி, டிச.2-

அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்படுவதாகக் குற்றச்சாட்டு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ், மதுரை இளைஞர் ரமேஷ், விருத்தாசலத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செல்வமுருகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் ஏற்படும் மரணம் தொடர்பான வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் இன்று, நாட்டின் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்துவதற்கான பரிந்துரைகளையும், உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கை ஜனவரி 27–ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் அன்றைய தினம் வரை காவல் நிலையங்களில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்துத் தெரிந்துகொள்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *