சென்னை, டிச. 4
பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க முன்னாள் மத்திய குழு உறுப்பினர்கள் பேரவையின் 5வது வருடாந்திர கூட்டம் பெரியமேடு ராயல் ஓட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி பகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
எஸ்.ரகுநாதன் வரவேற்றார். சங்கத்தின் பொதுச் செயலாளர் கிருபாகரன் கூட்டத்தைத் துவக்கி வைத்து, முன்னாள் மத்திய குழு உறுப்பினர்களின் சேவையையும், தியாகத்தையும் பாராட்டினார்.
பேரவையின் தலைவர் பி.வி. இன்பசேகரன் தலைமை தாங்கினார். செயலர் ஆர். பாலசுப்பிரமணியன் பேரவையின் நோக்கத்தையும் அதன் செயல்பாடுகளையும் விவரித்தார். ஊழியர் சங்கத்தின் தலைவர் ஆர்.பாஸ்கர், முன்னாள் தலைவர்கள் டி.வேணுகோபால் ரெட்டி, எச். கணபதி, சி.எம். பாஸ்கரன், டி.ஈ. பாலசுப்பிரமணியன் பேசினார்கள்.
முக்கியமாக ஓய்வூதியர்களின் மருத்துவ வசதி, அவர்களை பாதிக்கக்கூடிய விஷயங்கள் குறித்து விவாதித்தனர். ஆதரவற்ற ஊனமுற்றோர்களின் காப்பகமான ‘ஆஸா நிகேதனுக்கு பேரவையின் சார்பில் ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கப்பட்டது. நாயகம் நன்றி கூறினார்.