சினிமா

சரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் சாயாதேவி!

பத்தரை மாத்து தங்கம் என்று சொல்லுவதைப் போல அட்சர சுத்தமான தமிழ்ப் பொண்ணு சாயாதேவி என்பதை நினைக்கிறபோது சந்தோஷம் ரெக்கை கட்டி பறக்கும்.

கலைக் குடும்பத்து வாரிசு சாயாதேவி .1970களின் பிற்பகுதியில் தமிழ் திரைப்பட உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த தரமான இயக்குனர் மகேந்திரனின் முகாமில் குருகுலவாசம் பயின்றவர் இயக்குனர் பன்முகக் கலைஞர் யார் கண்ணன் இன்னொரு பக்கம் நம்பர் ஒன் நாட்டிய இயக்குனராக எழுபது எண்பதுகளில் வெற்றி வலம்வந்த ஜீவா தம்பதியின் மகள். இப்படி பாட்டும் நாட்டியமும் இயக்கமும் கலந்திருக்கும் குடும்பத்தின் கலை வாரிசு சாயாதேவி… மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன?

பத்தாம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு சினிமா மோகத்தில் இருந்தவருக்கு கன்னிமாடம் வாழ்க்கை கொடுத்திருக்கிறது. அறிமுகப் படம் இவரை காலூன்ற வைத்திருக்கிறது கலை உலகில்.

மேற்கத்திய நடனமும் அத்துப்படி. சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பதும் சிறப்பு.

தமிழ் நடிகைகள் இல்லை இல்லை என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய காலக்கட்டத்தில் இதோ இங்கே இருக்கிறேன் நான் என்று பதில் குரல் கொடுப்பதைப் போல கன்னி மாடத்தில் சாயாதேவி. சரிதா, அர்ச்சனா, கீர்த்தி சுரேஷ் வரிசையில் இன்றைய காலகட்டத்தில் போஸ் வெங்கட்டின் சாயாதேவி என்று தனி முத்திரை குத்தலாம்.

தமிழ் சினிமாவுக்கு: நடிப்பு- இளமை – இனிமை – வசீகரம், நான்கும் ஒருங்கிணைந்த கலவையில் சாயாதேவி… ஊரும் உலகமும் மெச்ச உச்சம் தொடுவது நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *