செய்திகள்

பங்காரு அடிகளார் சதாபிஷேக திருமண விழா: அமைச்சர்கள், நீதிபதிகள், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்பு

மேல்மருவத்தூர், பிப்.27–

பங்காரு அடிகளார் – லட்சுமி பங்காரு அடிகளார் சதாபிஷேக கல்யாணம் மேல்மருவத்தூரில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.சி.சம்பத், கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி மாநில இளைஞர் அணித்தலைவர் எம்.பி. அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சித்தர்பீடம் முழுவதும் மலர்களாலும், மின்விளக்குகளாலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. கருவறை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

காலையில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு திருமாங்கல்ய பூஜையும், சதாபிஷேக வேள்வியும் நடைபெற்றது. இந்த வேள்வி பூஜையில் குருமேடை குரு வேள்விகுண்டம், மேரு, உடலெங்கும் சங்கு கொண்ட ஐந்து தலை நாகச்சக்கரம் ஒன்றை ஒன்று ஒட்டியபடி தேனடை போன்ற தோற்றம் கொண்ட அறுக்கோண வேள்விகுண்டம் ஆகியன அமைக்கபட்டிருந்தது. இந்த பூஜையில் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அடிகளார் குடும்பத்தின் மகளிர்களும் கலந்து கொண்டனர்.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சித்தர்பீடத்திற்கு ஆன்மிககுரு பங்காரு அடிகளார், மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் வந்தனர். பங்காரு அடிகளாருக்கு பாதபூஜை செய்து சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

சதாபிஷேக கல்யாண நிகழ்சியில் பங்காரு அடிகள், லட்சுமி பங்காரு அடிகளாருக்கு திருமாங்கல்யம் அணிவித்தார்.

இந்த விழாவில் பல்வேறு நாட்டிலிருந்தும், மாநிலங்களிலிருந்தும் செவ்வாடை பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. டீக்காராமன், மாநில சட்ட ஆட்சி மொழி ஆணையத் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன், உறுப்பினர் வழக்கறிஞர் சங்கர், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலர் கே.டி. ராகவன். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய தலைவர் மகேஸ்வரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் திரைஉலக பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

மேலும் விழா ஏற்பாட்டினை குடும்பத்தினர் கோ.ப.அன்பழகன், அ.ஆஷாராணி அன்பழகன், கோ.ப.செந்தில்குமார், டாக்டர். ஸ்ரீலேகாசெந்தில்குமார், த.ரமேஷ், ப.ஸ்ரீதேவிரமேஷ், ப.ஜெய்கணேஷ், ப.உமாதேவி ஜெய்கணேஷ் மற்றும் பேரக்குழந்தைகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *