சினிமா

சசிகுமார் – நிக்கி கல்ராணி இணையும் ‘ராஜ வம்சம்’: சுந்தர்.சி உதவியாளர் கதிர்வேலு – டைரக்டர்!

‘ராஜ வம்சம்’ – செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி.ராஜா தயாரிக்கும் படம். அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்குகிறார். கதாநாயகனாக இயக்குனர், நடிகர் சசிகுமார் நடிக்க இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இத்திரைப்படம் சசிகுமாரின் 19–வது படம்.

நட்சத்திர பட்டாளங்களுடன் ஜனரஞ்சகமான படங்களை இயக்குவதில் புகழ்பெற்றவர் இயக்குனர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர்தான் கதிர்வேலு .

இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார், சதிஷ் ,மனோபாலா ,சிங்கம் புலி , யோகி பாபு ,கும்கி அஸ்வின் ,ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி ,ரமணி , ராஜ் கபூர் ,தாஸ் , நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ் , சமர் , ரேகா,சுமித்ரா , நிரோஷா ,சந்தான லட்சுமி ,சசிகலா ,யமுனா ,மணி சந்தனா ,மணி மேகலை,மீரா ,லாவண்யா ,ரஞ்சனா,,ரஞ்சிதா ,ரம்யா ,தீபா பலர் கலைஞர்கள் நடித்துள்ளனர் .

சித்தார்த் ஒளிப்பதிவு செய்ய, சாம்.சிஎஸ் இசை அமைக்கிறார் .கலை இயக்கம் சுரேஷ் மற்றும் படத்தொகுப்பினை சபு ஜோசப் கவனிக்கிறார்.நிர்வாக தயாரிப்பு N .சிவகுமார் , தயாரிப்பு மேற்பார்வை பாண்டியன் பரமசிவம் .

இப்படத்திலிருந்து வெளியான ட்ரைலர் மற்றும் முதல் பாடல் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்கிறார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அகமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *