செய்திகள்

சமஸ்கிருத நாடக உத்சவ விழா: டாக்டர் ரமா கல்யாணிக்கு சம்ஸ்கிருத ரத்னா விருது

Spread the love

சென்னை, டிச. 3

சென்னை மயிலாப்பூரில் பிரபலமான தர்ம கேசரி சோலார் கே. எஸ். சுப்பிரமணிய ஐயர் டிரஸ்ட் சார்பில் 21ஆம் ஆண்டு சமஸ்கிருத நாடக உற்சவம் கீழ்ப்பாக்கம் பாரதிய வித்யாபவன் அரங்கில் நடைபெற்றது.

பாரதிய வித்யா பவன் இயக்குனர் கே. என். ராமசாமி உற்சவத்தை துவ்ககி வைத்து வாழ்த்தினார். சென்னை மாநிலக்கல்லூரி சமஸ்கிருத துறை முன்னாள் தலைவர் டாக்டர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில் டாக்டர் ரமா கல்யாணிக்கு சமஸ்கிருத ரத்தினா என்னும் பட்டத்தை டாக்டர் தியாகராஜன் வழங்கினார். சென்னையில் உள்ள சி டி எஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கண்ணன் சுகந்தராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வாழ்த்தினார். கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்தியாஸ்ரம் பள்ளியின் முதல்வர் சமஸ்கிருத ரத்னா பி.ஜி. சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

முன்னதாக பள்ளி மாணவர்களுக்கி டையே சமஸ்கிருத அமரகோசம், அந்தாக்ஷரி, பரதம், கதாகாலட்சேபம், நாடகம், போட்டி நிகழ்ச்சிகள் நடை பெற்றன. அமரகோசத்தில் சஞ்சனா, வநிஷா, ராகவன், அத்வைத், நரேன், ஸ்ரேயா ஸ்ரீராம் ஆகியோர் பரிசு பெற்றனர்.

அந்தாக்ஷரி போட்டியில் டிஏவி கோபாலபுரம், நுங்கம்பாக்கம் பிஎஸ்பிபி பள்ளிகள் பரிசைப் பெற்றன கேகே நகர் பிஎஸ்பிபி பள்ளியை சேர்ந்த இந்திராணி சிறந்த கலைஞருக்கான விருது பெற்றார்.

பரதத்தில் பிஎஸ்பிபி நுங்கம்பக்கம், சிவசாமி கலாலயம், தி.நகர் பிஎஸ்பிபி பள்ளிகள் முதல் மூன்று இடத்தை பிடித்தன. கதாகாலட்சேபத்தில் பிஎஸ்பிபி தி நகர், பிஎஸ்பிபி நுங்கம்பக்கம், டிஏவி கோபாலபுரம் முதல் மூன்று இடங்களைப் பிடித்தன. இதேபோல நாடகப் போட்டியில் பிஎஸ்பிபி கேகே நகர், பிஎஸ்பிபி தி.நகர், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிகள் முதல் மூன்று இடத்தை பிடித்தனர். ஒட்டுமொத்த சாம்பியன் பரிசுக் கோப்பையை பிஎஸ்பிபி நுங்கம்பக்கம் மாணவர்கள் பெற்றனர்.

டிரஸ்டின் நிர்வாகி டாக்டர் சந்திரா ரமணி அனைவரையும் வரவேற்று 21 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சோலார் டிரஸ்டின் செயல்பாடுகளையும், இதுநாள்வரை விருது பெற்றிருக்கும் சமஸ்கிருத பேராசிரியர்களின் பட்டியலை வெளியிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *