சினிமா

லண்டன் பரபரப்பு பகுதியில் ‘சண்டைக்காரி’: ஸ்கேனர் சுழலும் ஒளி விளக்குகளுடன் அரங்கு

Spread the love

சென்னை, பிப்.4–

“ சண்டக்காரி ” – ஆர். மாதேஷ் இயக்கத்தில் விமல் – ஸ்ரேயா நடிக்கும் படத்திற்காக பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

காட்சிப்படுத்த தேவையான லேட்டஸ்ட் ஸ்கேனர் சுழலும் ஒளி விளக்குகள் அனைத்தும் வரவழைக்கப்பட்டு அரங்கு முழுவதும் பொருத்தப்பட்டு ஒளி வெள்ளத்தில் மிதந்த அந்த அரங்கினை படபிடிப்பிற்கு வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்து பாராட்டினர். அங்கு, 200 துணை நடிகர்கள் பங்கேற்க, 100 நடன கலைஞர்களுடன், விமல், ஸ்ரேயா, சத்யன், புன்னகை பூ கீதா, என நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டு நடனமாடிய காட்சி படமாக்கப்பட்டது,

இந்தப்படத்தில் ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார் .விமல், ஸ்ரேயாவின் நிறுவனத்தில் அவருக்கு கீழ் பணிபுரியும் எஞ்ஜினியராக நடிக்கிறார். இந்தப்படத்திற்காக லண்டனில் பிசியான ஏரியாவான வாட்போர்டு ஏரியாவில் மிகப்பெரிய இந்த நடன அரங்கு அமைக்கப்பட்டது, அதில் நம் ஊர் தொழில் நுட்பக்கலைஞர்களுடன் அங்கு இருந்த தொழில் நுட்பக் கலைஞர்களும் இணைந்து மிகச் சிறப்பாக நடன அரங்கினை அமைத்தனர்.

ஒளிப்பதிவு ஆர்.பி. குருதேவ், இசை அம்ரீஷ், தயாரிப்பு ஜெயபாலன் ஜெயக்குமார், மக்கள் தொடர்பு: ரியாஸ் அகமது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *