செய்திகள்

300 படகுகளுக்கு பாதுகாப்பான புகலிடம்: அண்ணா தி.மு.க. பிரமுகர் மாமல்லபுரம் ராகவனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பாராட்டு

காஞ்சீபுரம், டிச.2

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் இ.சி.ஆர். சாலையில் உள்ள சுற்றுப்புற பகுதி மீனவர்களின் 300 படகுகள் ‘நிவர்’ புயல் காரணமாக ஏற்படும் சூறாவளி காற்றில் அடித்து சென்று சேதமடையாமல் இருக்க திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அண்ணா தி.மு.க. செயலாளரும், சமூக சேவகருமான மாமல்லபுரம் ஜி.ராகவன் டிராக்டர், ஜெ.சி.பி. எந்திரம் ஏற்பாடு செய்து அதன் உதவியுடன் படகுகளை பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் வைத்து உதவி செய்தார்.

????????????????????????????????????

பிறகு புயல் கரையை கடந்தவுடன் மீண்டும் ஜெ.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் மீனவர்கள் கடலுக்கு செல்லும் வகையில் படகுகளை கடற்கரைக்கு கொண்டு வர உதவி செய்தார்.

புயலால் கரைப்பகுதியில் வசித்த மீனவர்களை அழைத்துச் சென்று பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி உபசரித்தார்.

இதையடுத்து மாமல்லபுரம் அண்ணா தி.மு.க. பிரமுகர் ராகவன் புயல், பேரிடர் காலத்தில் தொடர்ந்து செய்து வரும் சமூக பணிகளை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *