புதுவை வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை மத்தியஅரசு திரும்பப் பெறக்கோரி புதுவையில் காங்கிரஸ் 4 நாள் தர்ணா போராட்டம் நடத்தியது.
இதை முதல்வர் வி. நாராயணசாமி தொடக்கி வைத்தார். அமைச்சர்கள் சாஜகான் , கந்தசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி சுப்பிரமணியம் , எம்.பி.வைத்திலிங்கம், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகியோரும் கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். இன்னொரு கூட்டணி கட்சியான திமுக கலந்துகொள்ளவில்லை.
சேலம், டிச.17– 10 நாளில் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளும் துவங்கப்பட்டு விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம், கொண்டலாம்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து பேசியதாவது:– அம்மா நல்லாசியோடு, தமிழகத்தில் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பாமர மக்கள் நல்ல சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக ஏழை மக்கள் நிறைந்த பகுதிகளிலேயே முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வழங்கியதோடு மட்டுமல்லாமல், உடனடியாக […]
புதுடெல்லி, டிச. 28– புதுப்பிக்கப்படாத ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன ஆவணங்கள் வரும் மார்ச் 31ந்தேதி வரை (மேலும் 3 மாதங்கள்) செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து அரசு அலுவலக பணிகளும் முடங்கின. இதன் காரணமாக பிப்ரவரி 2020 முதல் காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம், பல்வேறு வாகனங்களின் ஆர்.சி., பர்மிட், தகுதிச் சான்று ஆகியவற்றை […]
பெர்லின், அக். 29- காற்று மாசு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனா தொற்றால் அதிக அளவில் உயிரிழக்கின்றார்கள் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் ஃபார் கெமிஸ்ட்ரி உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள், ஐரோப்பாவில் காற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய கொரோனா உயிரிழப்புகளின் விகிதம் சுமார் 19% ஆகவும், வட அமெரிக்காவில் இது 18% ஆகவும், கிழக்கு ஆசியாவில் 27% ஆகவும் இருப்பதைக் கண்டறிந்தனர். கார்டியோவாஸ்குலர் ரிசர்ச் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கொரோனா […]