வர்த்தகம்

இந்தியன்ஆயில் கியாஸ் சிலிண்டர் பெற ‘‘பேடிஎம்’’ மூலம் பணம் செலுத்தினால் ரூ.5 சலுகை

கொரோனா பரவலை தடுக்க

இந்தியன்ஆயில் கியாஸ் சிலிண்டர் பெற ‘‘பேடிஎம்’’ மூலம் பணம் செலுத்தினால் ரூ.5 சலுகை

சென்னை, நவ. 21

கொரோனா பரவலை தடுக்க தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும், இண்டேன் எல்பிஜி வாடிக்கையாளர்களை டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக, இந்தியன் ஆயில் நிறுவனம், பேடிஎம் (Paytm) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

எல்பிஜி சிலிண்டர்களுக்காக, பேடிஎம் (Paytm) மூலம் செலுத்தும் ஒவ்வொரு பில்லுக்கும் ரூ.5 கேஷ் பேக் தரப்படும். டெலிவரி செய்யப்படும் தருணத்தில், அனைத்து இண்டேன் எல்பிஜி சிலிண்டர் டெலிவரி ஊழியர், Paytm QR Code–-ன் கருவி வைத்திருப்பார். வாடிக்கையாளர்கள், Paytm wallets அல்லது ஏதேனும் UPI இருக்கும் செயலி (ஆப்) மூலம் அந்த QR Code ஸ்கேன் செய்து தங்களது பணத்தை செலுத்தலாம்.

வெற்றிகரமாக பில் பணம் செலுத்தப்பட்ட ஒவ்வொரு முறையும் Paytm மூலம் ரூ. 5 கேஷ் பேக் உடன் திருப்பி அளிக்கும் இந்த திட்டம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்ந்த இண்டேன் வாடிக்கையாளர்களுக்காக டிசம்பர் மாதம் 10ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்தியன்ஆயில் நிறுவனம், மின்னணு தளங்கள் மூலம் டிஜிட்டல் வழிமுறையில் பணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்துவதை தொடர்ந்து ஊக்குவித்து ரொக்கமில்லா பரிமாற்றம் அல்லது குறைந்த அளவிலான ரொக்க பரிமாற்றம் என்கிற அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேற தீவிரமாக பணியாற்றி வருகிறது.

இந்தியன்ஆயில் நிறுவனம், பல்வேறு வகை டிஜிட்டல் பேமென்ட் வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ-வாலட், BHIM, UPI, கூகுள் பே மற்றும் Paytm. சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர் வசம் mPOS கருவி இருக்கும். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் வழிமுறையில் பணத்தை செலுத்தலாம்.

இது போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், இண்டேன் எல்பிஜி வாடிக்கையாளர்களை , டிஜிட்டல் வழிமுறையில் பணத்தை செலுத்துவது ஊக்குவிக்க உறுதுணை புரியும். இதனால், ரொக்கப் பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்டு கரன்சி தாள்கள் மூலம் கொரோனா தொற்று அச்சுறுத்தல் பரவுவது குறைய ஏதுவாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *