செய்திகள்

திருத்தணி அருகே வாகன சோதனை: ரூ. 3.29 லட்சம் பறிமுதல்

திருத்தணி, மார்ச் 11–

திருத்தணி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில் ரூ. 3.29 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த அரக்கோணம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரக்கோணம் நோக்கி சென்ற வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் ரூ. 3.29 லட்சம் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போது, திருமண நிகழ்ச்சிக்காக பட்டுச் சேலை வாங்குவதற்காக திருப்பதியிலிருந்து 12 பேர் காஞ்சிபுரத்திற்கு வேனில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *