செய்திகள்

குற்றச் சம்பவங்களை கண்காணிக்க மாமல்லபுரம் கடற்கரையில் 15 சுழலும் கேமராக்கள்

Spread the love

காஞ்சீபுரம், செப். 12–

மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் சு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க 15 இடங்களில் சுழலும் கேமராக்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக உள்ளது. இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு ஆகியவை யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய பாரம்பரிய நினைவு சின்னங்களாக உள்ளன. இங்கு விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கில் பயணிகள் கூடுவார்கள். மாமல்லபுரம் கடற்கரையில் சில சமூக விரோதிகள் கடலில் குளிக்கும் சுற்றுலா பயணிகளின் உடைமைகளை திருடுவதும், காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, போலீசாரின் பரிந்துரையின்பேரில், தமிழக சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் கடற்கரையில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கும் வகையில் முதல் கட்டமாக 15 இடங்களில் சுழலும் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *