வர்த்தகம்

ரூ. 6.95 கோடியில் ரோல்ஸ் ராய்ஸ் ‘கோஸ்ட்’ கார் அறிமுகம்

சென்னை, செப்.18–

இங்கிலாந்து நாட்டு ரோல்ஸ் ராய்ஸ் கார் நிறுவனம் புதிய ‘கோஸ்ட்’ என்னும் பெயரில் சொகுசு காரை அறிமுகம் செய்து உள்ளது. இதன் விலை ரூ. 6 கோடியே 95 லட்சம் ஆகும். நவீன கார் தொழில் நுட்பம், பாதுகாப்பு, விரைவான ஓட்டம், சொகுசு வசதிகள் இந்த காரில் உள்ளன. தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ்

‘கோஸ்ட்’ கார் செயல்பாட்டில் முன்னிலையில் உள்ளது என்று இது பற்றி விவரித்த தலைமை நிர்வாக அதிகாரி டோர்ஸ்டன் முல்லர் தெரிவித்தார்.

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவன 116 ஆண்டு வரலாற்றில் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார் உலகளாவிய சாதனை காராக பாராட்டு பெற்றுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான இந்த மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜெர்மன் ‘பிஎம்டபிள்யூ’ கார் நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் உரிமையாளராக திகழ்கிறது. மலைகளிலும் சீறிப்பாயும். சொகுசு அம்சங்கள் நிறைந்து ஒரு மகாராஜா அரண்மனை போல உள் அமைப்பு கொண்டுள்ளது. 8 வேக கியர் பாக்ஸ் உள்ளது. மேடு பள்ளங்களில் குலுங்காத சவாரிக்கு புதுரக சஸ்பென்சன் உள்ளது. இதர ரோல்ஸ் ராய்ஸ் கார்களை விட ‘கோஸ்ட்’ சற்று பெரிய காராக இருக்கும். வெளியல் உள்ள சத்தம் உள்ளே கேட்காத வசதி உள்ளது. 5 வினாடியில் 100 கி.மீட்டர் வேகத்தை எட்டும் என்ஜின் உள்ளது. இது சொகுசு கார் ரசிகர்களை கவரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *