சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை
என்று கூறியுள்ளார் வள்ளுவர்.
உலகில் அதிகரித்துவரும் உணவுக்கான தேவை, மற்றும் உணவை தயாரிக்க நிலையான முறை வேண்டும். அதற்காக விவசாயிகளின் பயிர் விளைச்சலை மேம்படுத்த நிலத்தில் தனித்தனிச் செடிகளை கண்காணிக்கும் வகையில் மாதிரி ரோபோக்களை கூகுளின் துணை நிறுவனமான ஆல்ஃப பெட் (Alphabet) அறிமுகப்படுத்தி யுள்ளது.
உலகை மாற்றும் தொழில்நுட்பம் உருவாக்குவதை இலக்காக வைத்திருக்கும் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் பிராஜெக்ட் மினரெல் திட்டத்தை தலைமை தாங்கும் எலியோட் கிராண்ட் கூறுகையில், “விவசாயத்துறையில் உணவு எப்படி உருவாக்கப்படுகிறது என்கிற முறையை மாற்ற இந்த தொழில்நுட்பம் உதவும் என நம்புவதாக,” தெரிவித்தார்.
“ஒவ்வொரு பயிர், செடியையும் கண்காணித்து, அதற்கு தேவையான சத்தை கணித்து கொடுத்தால் எப்படி இருக்கும் ?’
மண் அல்லது வான் நிலை குறித்த தகவல்கள் விவசாயிகளுக்கு கிடைக்கலாம். ஆனால், ஒரு செடி ஒரு சுற்றுச்சூழலில் எவ்வாறு வளர்கிறது என்கின்ற குறிப்பட்ட தகவல்களை சேகரிக்க உதவும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“கடந்த சில ஆண்டுகளாக இந்த மாதிரி ரோபோக்கள் கலிபோர்னியாவில் உள்ள ஸ்ட்ராபெரி நிலங்களிலும் இலினோயிஸில் உள்ள சோயாபீன் நிலங்களிலும் விடப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்போது ஒவ்வொரு ஸ்ட்ராபெரி அல்லது சோயாபீன் செடியையும் பிரித்து, ஆராய்ந்து, உயர்தர புகைப்படங்களை இந்த ரோபோக்கள் அளித்ததாக” இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

செடியின் உயரம், இலை இருக்கும் பகுதிகள், மற்றும் பழத்தின் அளவு ஆகியவற்றையும் இந்த ரோபோக்கள் கண்டறிந்தன.
இந்த தரவுகள் எல்லாம் ஒரு இயந்திரத்தில் இணைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு பயனுள்ள வடிவங்களையும் நுண்ணறிவுகளையும் கண்டுபிடிக்க முயற்சிக்கப்படும்.
“விவசாய நிலங்களை கண்காணிக்க ரோபோக்களை பயன்படுத்துவது சிறந்த யோசனையாக இருக்கிறது. பூச்சிகள் இருக்கிறதா என்று பார்ப்பது, பயிர் சரியான நேரத்தில் நடப்படுகிறதா, எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வது, களை எடுப்பது, அல்லது வேலிகளை எவ்வாறு நகர்த்தலாம் போன்ற பல்வேறு விஷயங்களில் இது உதவும்”
நவீன விவசாயம் என்று கூறி உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பாரம்பரிய ரகங்கள் கைவிடப்பட்டு, புதிது புதிதாக வீரிய ரக ஹைபிரீட் ரகம், மரபணு நீக்கப்பட்ட விதை அறிமுகப்படுத்தப்படுகின்றன. செயற்கை உரங்களையும் அதிகம் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். களைகளை கட்டுப்படுத்த ஆட்களை பயன்படுத்துவது அதிக செலவாகும் என்பதால், களைக்கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பூச்சி மருந்துகள், களைக்கொல்லிகள் பலரும், முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்டவை. இவற்றால், நிலத்தடி நீரில் உப்பின் தன்மை அதிகரிக்கிறது. நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தும் விவசாயிகள், தொழிலாளர்கள், இதனால் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
விளைநிலத்தில் விளைச்சலை சேதப்படுத்தாத அளவிற்கு உதவியாய் நகரும் இந்த ரோபாக்கள், பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பது குறித்த பெருமளவிலான தரவுகளை சேகரிக்கும்.