செய்திகள்

செங்கல்பட்டு அருகே சங்கிலி தொடர் விபத்து; 5 வாகனங்கள் சேதம்

Spread the love

காஞ்சீபுரம், டிச 2–

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்தது. நெடுஞ்சாலையில் மழைநீர் ஒடியது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன.

இந்த நிலையில் முன்னாள் சென்ற வேனை டிரைவர் திடீரென பிரேக் பிடித்து நிறுத்தினார். இதனால் அதன் பின்னால் வந்த 3 கார்கள் ஒன்றோடு ஒன்று தொடச்சியாக மோதியது.

இதில் 5 வாகனங்கள் சேதமடைந்தன. பின்னர் போலீசாரின் உதவியுடன் அந்த வாகனங்கள் அப்புறப்படுத்திப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *