செய்திகள்

புறநகர் மின்சார ரெயில்களை மீண்டும் இயக்க அனுமதி: மத்திய ரெயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை, அக். 23

மீண்டும் மின்சார புறநகர் ரெயில்களை இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரி மத்திய ரெயில்வே மற்றும் வணிகத் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதி இருக்கிறார்.

இது சம்பந்தமாக முதல்வர் எழுதி இருக்கும் அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

‘இப்போது தமிழ்நாட்டில் மாநிலங்களுக்கு இடையில் ஓடும் ரெயில்கள் மற்றும் மாநிலங்களில் மாவட்டங்களுக்கு இடையில் ஓடும் பல்வேறு ரெயில்களின் சர்வீசை தென்னக ரெயில்வே துவக்கி இருக்கிறது. இதே போல, மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் சென்னை மெட்ரோ ரெயில் உள்பட பொது போக்குவரத்துக்கு (பஸ் சர்வீஸ்) மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை நகரிலும் புறநகர்ப்பகுதிகளிலும் மீண்டும் புறநகர் மின்சார ரெயில்களை பொதுமக்களின் நலன் கருதி இயக்க வேண்டும் என்று கோரி கடந்த மாதம் (செப்டம்பர்) 2ந் தேதியன்று மாநில அரசு ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளது.

மீண்டும் புறநகர் மின்சார ரெயில்களை இயக்குவது – பொதுமக்களுக்கு பெருமளவுக்கு பலனுள்ளதாக இருக்கும். விரைவில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும். ஆகவே, சென்னை நகரிலும் புறகர்ப்பகுதிகளிலும் மின்சார ரெயில்களை இயக்க தென்னக ரெயில்வேக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ‘கொரோனா’வைத் தடுக்க மேற்கொள்ளப்படும் நிபந்தனை – வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *