செய்திகள் வாழ்வியல்

எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் செயல்திறனை அதிகரிக்க காந்திகிராம பல்கலைக்கழகம் ஆராய்ச்சி

நானோ தொழில் நுட்பத்தில் குறைமின்சரத்தில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் செயல்திறனை அதிகரிக்க காந்திகிராம பல்கலைக்கழகம் ஆராய்ச்சி செய்துவருகிறது.

லேசர், எல்.இ.டி., போன்ற எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் காந்திகிராம பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை ஈடுபட்டுள்ளது.

அன்றாட வாழ்க்கையில் டிவி, பிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிகளவில் பயன்படுகிறது. அந்த பொருட்களின் செயல்திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இதற்காக எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் குறைமின் கடத்தியில் நானோதொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. தற்போது நானோ தொழில்நுட்பத்தில் எலக்ட்ரான் மூலம் இயங்கும் குறைமின் கடத்தியே பயன்படுத்தப்படுகிறது.

எலக்ட்ரான்களுக்கு பதிலாக எக்சிடான் பயன்படுத்தும்போது எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் செயல்திறன் மேலும் அதிகரிக்கிறது. இதற்காக நானோ தொழில் நுட்பத்தில் குறைமின் கடத்தியில் எக்சிடான் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக இயற்பியல் துறை ஈடுபட்டுள்ளது.

பேராசிரியர் பி.நித்தியானந்தி இது பற்றி கூறியதாவது:–

நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக மத்திய அறிவியல் தொழில்நுட்ப கழகம் ரூ.13 1/2 லட்சம் ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஒர்க் ஸ்டேஷன் கம்ப்யூட்டர், மென்பொருட்கள் வாங்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சி பணி 3 ஆண்டுகள் வரை நடக்கும். ஆராய்ச்சி வெற்றி அடைந்தால் ‘லேசர்,’ எல்.இ.டி., போன்றவற்றின் செயல்திறன் அதிகரிக்கும்,” என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *