வாழ்வியல்

பெண்களின் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த புதிய ஆராய்ச்சி

பெண்களின் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய புதிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மார்பக புற்றுநோய்க்கான ஊடுகதிர்ப்பட (மேமோகிராஃபி) பரிசோதனை எக்ஸ்-கதிர்களைக் கொண்டு கட்டி உணரும் முன்பே மார்பக புற்றுநோயை கண்டறிய பயன்படுத்தப்படுகிறது.

இதன் முக்கிய குறிக்கோள் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது ஆகும் . அதன்முலம் அதனை நோய் குணப்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதாகும்.

இந்த திறனாய்வுக்கு 39 முதல் 74 வயதுக்குட்பட்ட 600,000 பெண்கள் கொண்ட ஏழு ஆய்வு எடுத்துக்கொள்ளபட்டது, இவர்கள் சமவாய்ப்பிட்டு மேமோகிராஃபி உடல்நல ஆய்வுக்கும் அல்லது ஆய்வுக்கு உட்படுத்தாமலும் சோதிக்கப்பட்டார்கள்.

மார்பக புற்றுநோய் உடல்நல ஆய்வு இறப்பு விகிதத்தைக் குறைக்க இயலவில்லை என்று இந்த ஆராய்ச்சிகள் மிகவும் நம்பகமான தகவல் தந்தது. இறப்பு விகிதத்தை குறைக்கும் என்று கண்டறியப்பட்ட ஆய்வுகள் பாரபட்சமாக (குறைந்த கவனத்துடன்) செய்யப்பட்டதாக அறியப்பட்டது.

இருப்பினும் உடல்நல ஆய்வின் மூலம் சில பெண்களில் புற்றுநோய் கண்டறிய நேரிடலாம். இவ்வாரு கண்டறியப்பட்ட புற்றுநோய் மரணத்திலோ அல்லது சுகவீனதிற்கோ வழிவகுக்கும் என்பதற்கான வாய்ப்புகள் குறைவே.

தற்போதைய நிலையில் எந்த பெண்கள்களுக்கு இது பொருந்தும் என்று சொல்ல முடியாது, இவர்கள் மார்பகங்கள் அல்லது கட்டிகள் அகற்றப்பட்டு அனாவசியமாக கதிரியக்க சிகிச்சை பெறும் வாய்ப்பு உள்ளது.

13 வருடம் வரை பின்தொடர்ந்த பின்பு மார்பகம் புற்றுநோயின் இறப்பு விகிதத்தை 15 விழுக்காடு உடல்நல ஆய்வு குறைக்கும் என்றும் அதீதசிகிச்சை மற்றும் அதீதநோயறிதல் 30 விழுக்காடு என்றும் எடுத்துக்கொண்டால், அதன் பொருள் 10 வருடங்களில் 2000 பெண்கள் உடல்நல ஆய்வுக்கு உட்படுத்தினால் ஒரு பெண் மார்பக புற்றுநோயினால் இறப்பதை தடுக்கலாம்.

இந்த உடல்நல ஆய்வுக்கு உட்படுத்தாமல் இருந்திருந்தால் புற்றுநோய் அல்லாத 10 ஆரோக்கியமான பெண்கள் அநாவசியமாக சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும் நோய் உள்ளது என்று தவறாக சோதனையில் கண்டறியப்பட்டதால் 200 பெண்களுக்கு மேலாக பதட்டம் உட்பட பல முக்கியமான மனரீதியான துயரங்களுக்கு ஆட்படுத்தப்படுகின்றனர் மற்றும் சந்தேக நிலையிலே பல காலம் இருப்பர்.

உடல்நல ஆய்வுக்கு (screening) அழைக்கப்படும் பெண்கள் அனைவருக்கும் இதன் நன்மை மற்றும் தீமைகள் முழுவதும் விளக்கப்படும். இந்த ஆராய்ச்சிகளுக்கு பின்பு ஏற்பட்ட மருத்துவத்தின் கணிசமான முன்னேற்றங்களாலும் மக்களிடையே மார்பகப்புற்று நோய்ப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தமையாலும் தற்போதைய உடல்நல ஆய்வுகளின் முழுமையான பயன் இந்த ஆராய்ச்சிகள் மூலம் கிடைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *