செய்திகள்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் 25% உயர்ந்து ரூ.70 கோடியாக அதிகரிப்பு

Spread the love

சென்னை, பிப்.8–

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லாபம் 25% அதிகமாக ரூ.70 கோடியாக உயர்ந்தது. வழங்கிய கடன் 11 ஆயிரம் 624 கோடியாக அதிகரித்துள்ளது. இது வழங்கிய கடனில் 52.8% தொகை சுயமாக தொழில் புரிபவர்களுக்கு வழங்கியதால் பாதுகாப்பானது ஆகும். வராக் கடன் 4.2% ஆக உள்ளது. இந்த நிறுவனத்துக்கு 149 கிளைகள் உள்ளது என்று இதன் நிர்வாக இயக்குனர் யஷ்பால் குப்தா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:–

முந்தைய 2018-–19 நிதியாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு நிதியாண்டின் அக்டோபர் – -டிசம்பர் காலாண்டில் ரெப்கோ ஹோம் பைனான்ஸின் செயல்பாட்டு வருமானம் 12 சதவீதம் அதிகரித்து ரூ.340 கோடியாக இருந்தது. நிகர வட்டி வருமானம் ரூ.131.8 கோடியாக காணப்பட்டது. நிகர லாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.69.7 கோடியைத் தொட்டது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலகட்டத்தில் செயல்பாட்டு வருவாய் 13 சதவீதம் உயர்ந்து ரூ.999.9 கோடியாகவும், நிகர வட்டி வருமானம் ரூ.382.6 கோடியாகவும் இருந்தன. நிகர லாபம் 27 சதவீதம் உயர்ந்து ரூ.232.6 கோடியானது.

கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் நடவடிக்கைகளின் மதிப்பு 9 சதவீதம் உயர்ந்து ரூ.11,624.9 கோடியாக இருந்தது. இதில், சுய தொழிலுக்கான பிரிவின் பங்களிப்பு 52.8 சதவீதமாகவும், சொத்துகளுக்கு எதிரான கடன்களின் பங்களிப்பு 18.6 சதவீதமாகவும் இருந்தது என தெரிவித்துள்ளார்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் 9 மாத காலத்தில் (2019 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) லாபமாக ரூ.232.60 கோடி சம்பாதித்துள்ளது. ரூ.2125.70 கோடிக்கு கடன் அனுமதித்தது. ரூ.2024.90 கோடிக்கு கடன் வழங்கியது. மொத்த வருவாய் 13% அதிகமாக ரூ.999.9 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *