வர்த்தகம்

கொரோனா தடுப்பூசியை கொண்டு செல்ல, குளிர்பதன வசதி வாகனம்: தமிழக அரசுக்கு இந்தியன் ஆயில் வழங்கியது

சென்னை, மார்ச் 6

இந்தியன் ஆயில் நிறுவனம், கொரோனா தடுப்பூசியை மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல ஏதுவாக, தமிழக அரசுக்கு குளிர்பதன வசதி உள்ள வாகனத்தை வழங்கியுள்ளது. இந்த வாகனம் மீது பொருத்தப்பட்டுள்ள இன்சுலேட் செய்யப்பட்ட கம்பார்ட்மெண்ட்டில், வேக்சின் இருந்தாலும் இல்லாவிட்டாலும் 2 டிகிரி முதல் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் இருக்கும்.

இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட, ரூபாய் 35 லட்சம் பெறுமானம் உள்ள இந்த வாகனத்தை, இன்று இந்தியன் ஆயிலின் செயல் இயக்குனர் பி.ஜெயதேவன், தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலர் டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் பொருளாதார அலோசகர் அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், டாக்டர்.ஜெ. ராதாகிருஷ்ணன், வாக் இன் கூலர்கள், டீப் பிரீசர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சாதனங்களை அளித்தமைக்காக, இந்தியன் ஆயில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவை மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொள்ளும் அரசின் முயற்சிகளுக்குப் பெரிதும் உறுதுணை புரிகின்றது என்று குறிப்பிட்டார்.

மேலும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை போக்க இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தமிழக அரசுக்கு வழங்கும் ரூ.3.24 கோடி பெருமானவுள்ள சாதனங்களில் இந்த குளிர்பதன வசதியுள்ள வாகனமும் ஒன்றாகும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *