சினிமா

‘இளையராஜா பற்றிய தகவல்களை பதிவு செய்யுங்கள்: யுவுன் சங்கருக்கு டைரக்டர் அமீர் அன்புக்கட்டளை!

Spread the love

நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன் சிங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார் டைரக்டர் அமீர்.

ஆர்.என்.ஆம்.ராஜி நிலா முகில் பிலிம்ஸ் வழங்கும் படம் ‘மாயநதி’. அசோக் தியாகராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் அபிசரவணன், வெண்பா, ஆடுகளம் நரேன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பவதாரிணி இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குனர்கள் அமீர், சுப்பிரமணிய சிவா, எஸ்.ஆர்.பிரபாகரன், நடிகர் சவுந்தரராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இயக்குனர் அசோக் தியாகராஜன் பேசுகையில், நம் வாழ்க்கையும் நதிபோல் தான். நம்மால் கணிக்க முடியாத ஒன்று. அதுதான் மாயநதி படம். நதி நிறைய திருப்பங்கள் கொண்டது. நம் வாழ்க்கையில் நிறைய பக்கங்களை பெண்கள் தான் நிரப்பி வருகிறார்கள். இசைஞானி இளையராஜா பாடல்கள் தான் நம் கவலைகளை ஆற்றுப்படுத்தியது. சந்தோஷத்தை அதிகப்படுத்தியது. அவர் வீட்டில் இருந்து இந்த விழாவிற்கு வருகை தந்த யுவன் சங்கர் ராஜாவிற்கு நன்றி என்றார்.

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘பவதாரிணி இசை பற்றி நான் சொல்றது எப்படி இருக்கும்னு தெரியல. இந்தப்படத்தின் பாடல்கள் ரொம்ப நல்லாருக்கு. இசை எங்க ரத்தத்துல இருக்கு. என் கை பிடிச்சி வாசிக்க வைத்தது அக்கா பவதாரிணி தான். என்னை இந்தளவிற்கு கூட்டிட்டு வந்தது அக்கா தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்றார்

அமீர் பேசுகையில், உலக வரலாற்றிலே இளையராஜா குடும்பம் போன்று உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இப்படி ஒரு குடும்பம் தமிழ்க்குடும்பமாக கிடைத்தது நாம் செய்த பாக்கியம். எம்.ஜி.ஆர் இன்று வரை நினைவுகூறப்படுகிறது’’. அவரோடு வேலை செய்தவர்களிடம் நிறைய விஷயங்களை கேட்டு நாம் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

நம் தமிழ்நாட்டில் இன்று மூன்றே கலைஞர்கள் தான் பெரிய கலைஞர்கள். இளையராஜா, ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பற்றிய பதிவுகளை உடனடியாக பதிய வேண்டும். அதனால் இளையராஜா பற்றிய பதிவுகளை யுவன் சிங்கர் ராஜா பதிவு செய்ய வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டார் டைரக்டர் அமீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *