வாழ்வியல்

தவளை, மீன்கள் மழையாக பெய்வதற்கு காரணம் என்ன?

1939 ஆம் ஆண்டு ஜூன் பதினேழாம் நாள் ஈரானிய நகரமான டாப்ரெஜில் விநோத மழை பெய்தது. அது, தவளை மழை. ஆம், வானிலிருந்து உயிருள்ள தவளைகள் தரையில் விழுந்து கொண்டிருந்தன. உலகமே வியந்த அந்த விநோத மழைக்குக் காரணம், ஒரு நீர்ப்பீச்சு (Water spout).

நீர்ப்பீச்சு உருவாக முக்கியக் காரணம், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம். கூடவே, மிக விரைவான வானிலை மாற்றங்கள். கடலின் மேற்பரப்பில் திடீரென்று காற்று சூடாக்கப்பட்டால், அது விரைந்து மேலெழும்புகிறது. காற்று மேலெழும்பியவுடன், அந்த வெற்றிடத்தை நோக்கி கடல் நீர் எழும்பி வரும்.

கடல் நீர் உறிஞ்சப்படும்போது அப்பகுதியில் வாழும் தவளைகள், மீன்கள், சிப்பிகள் என யாவும் நீருடன் மேல்நோக்கிப் பயணமாகின்றன. மேலே சென்ற கடல் நீர், காற்றுடன் பயணித்து சிறிது தொலைவில் கடலிலோ அல்லது கடற்கரை நகரங்களிலோ மழையாகப் பொழிகிறது.

நீர்ப்பீச்சு மிகப் பெரிய ஏரிகளிலும் ஏற்படும். டாப்ரெஜ் நகர தவளை மழைக்குக் காரணம், அந் நகரை ஒட்டியுள்ள ரிஜாயே ஏரியில் ஏற்பட்ட நீர்ப்பீச்சுதான். இதேபோன்ற ஒரு நீர்ப்பீச்சால் 1881ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள வொர்செஸ்டர் நகரில் ‘மீன் மழை’ பெய்துள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *