செய்திகள்

ஹேம்நாத்திடம் விசாரணை நடத்த சிறைத்துறைக்கு ஆர்டிஓ கடிதம்

சென்னை, டிச. 16–

நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது கணவரிடம் விசாரணை நடத்த சிறைத்துறைக்கு ஆர்டிஓ அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

பிரபல டிவி நடிகை சித்ரா கடந்த 9ம் தேதியன்று தனியார் ஓட்டல் அறையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து 14ம் தேதி நள்ளிரவு சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி 2 மாதங்களே ஆனதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. பெரும்புதூரில் நடந்து வரும் இந்த விசாரணையில் சித்ராவின் தாய் மற்றும் அவரது குடும்பத்தார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

சித்ராவின் கணவர் ஹேம்நாத் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள பொன்னேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துவதற்கு ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ பொன்னேரி சிறைத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். நாளை ஆஜர்படுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நாளை 11 மணியவில் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஹேமநாத் ஆஜராக உள்ளார். மேலும் நடிகை சித்ராவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் சக நடிகர் , நடிகைகளிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஆர்டிஓ அதிகாரி திவ்யஸ்ரீ தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிவில் அறிக்கையை நசரத்பேட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *