செய்திகள்

லட்சுமி விலாஸ் வங்கி சிறப்பாக செயல்பட மூலதனத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி அனுமதி

Spread the love

சென்னை, அக். 12

லட்சுமி விலாஸ் வங்கியுடன் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், இந்தியா புல்ஸ் வர்த்தகக் கடன் நிறுவனம் ஆகிய நிறுவனங்களை இணைக்க திட்டமிட்டு இருந்தது தொடர்பாக ரிசர்வ் வங்கியின் முடிவுகள் எங்களுக்கு கிடைத்தது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு அண்மைக் காலமாக நிலவி வந்த நிச்சயமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. லட்சுமி விலாஸ் வங்கி, அனைத்து சட்ட, திட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளுக்குட்பட்டு. அவற்றுக்கு இணங்க மூலதனத்தை உயர்த்தி திறம்பட செயல்பட தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

லட்சுமி விலாஸ் வங்கி 90 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமான மற்றும் மக்களின் வலுவான நம்பிக்கையைப் பெற்ற நிறுவனம் ஆகும். இதன் வாடிக்கையாளர்களின் வைப்புத் தொகை கிட்டத்தட்ட 26 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மூன்று தலைமுறை வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக சிறந்த சேவையை அளித்துள்ள நாங்கள் தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம். வளர்ச்சியை அதிகரிப்பதிலும் எங்களுடன் இணைந்து செயலாற்றும் பங்குதாரர்களின் மதிப்பை மேலும் உயர்த்துவதிலும் நாங்கள் உறுதியுடன் செயல்படுகிறோம். 1926-ம் ஆண்டு எங்களது பயணத்தை நாங்கள் தொடங்கினோம். இந்த வங்கியானது தனது நீண்ட பயணத்தில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் உட்பட ஏராளமான வர்த்தக சுழற்சியைக் கண்டுள்ளது. எல்விபி எப்போதுமே நெகிழ்ச்சித் தன்மையுடன் இருந்து அனைத்து சூழல்களிலும் உறுதியுடன் இருந்து வருகிறது. 1980-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே லட்சுமி விலாஸ் வங்கி தொழில் நுட்பத்தை ஏற்று, வைடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.

லட்சுமி விலாஸ் வங்கி 1961 65 கால கட்டத்தில் தனது கிளைகளை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து விரிவுபடுத்தி, மற்ற 9 வங்கிகளை முந்தி சாதனை நிகழ்த்தியது. 1974-ம் ஆண்டு நாங்கள் தமிழகத்திற்கு வெளியிலும் வங்கிக் கிளைகளைத் திறந்து விரிவுபடுத்தினோம். தற்போது 571 கிளைகள், 1045 ஏடிஎம்-களுடன் நாடு முழுவதும் பரந்து விரிந்து செயல்பட்டு ஒவ்வொரு நாளும் வளர்ச்சியை நோக்கி லட்சுமி விலாஸ் வங்கி பயணித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *