செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் ஏரி நீர் திறப்பு: ராமானுஜர் கோயில் குளம் நிரம்பியது

காஞ்சீபுரம், ஜன. 14–-

ஸ்ரீபெரும்புதூரில் பழைமை வாய்ந்த ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமானுஜர் தானுகந்த திருமேனியாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

இக்கோயிலுக்குச் சொந்தமான அனந்தசரஸ் திருக்குளம் கடந்த மே, ஜூன் மாதங்களில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி கோயில் நிர்வாகம் சார்பாக பொதுப்பணித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் இருந்து கடந்த நான்கு நாட்களாக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தற்போது ராமானுஜர் கோயில் குளம் நிரம்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *