செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ், வாசன் வாழ்த்து

Spread the love

சென்னை, செப்.11

வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகளை ஈர்த்து சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெளிநாடுகளில் உள்ள நகர உட்கட்டமைப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து, அவற்றை தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திடவும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு 28.8.2019 முதல் 10.9.2019 வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

அதன்படி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்று, தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்து நேற்று (10 ந் தேதி) சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து சென்னை திரும்பிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *