சினிமா செய்திகள்

ராஜவம்சம்: அறிமுகமாகும் முதல் படத்திலேயே 49 நடிகர் – நடிகைகளை இயக்கும் கதிர்வேலு

ராஜவம்சம் செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி டி ராஜா தயாரிக்க கதிர்வேல் (அறிமுகம்) இயக்குகிறார். சுந்தர் சி இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கதிர்வேல் பழுத்த அனுபவத்தின் முதிர்ச்சியில் இப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.

சசிகுமார் ஒரு கதாநாயகன். இவர் இன்னொரு கதாநாயகன். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, கும்கி அஸ்வின், ஆடம்ஸ், சரவணா, சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி, ராஜ்கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், சுமித்ரா, ரேகா, நிரோஷா, சந்தானலட்சுமி, சசிகலா, யமுனா, மணி, சந்தனா, மணிமேகலை, மீரா, லாவண்யா, நமிதா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என மொத்தம் 49 நடிகர் – நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு சித்தார்த், இசை சாம் சி எஸ்.

சினிமாவில் அறிமுகமாகும் இயக்குனர் பிரபலமான 49 நடிகர் நடிகைகளை வைத்து முதல் படத்தை இயக்குவது என்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது கதிர் வேலுவுக்கு இருக்கும் தன்னம்பிக்கையையும் திறமையையும் நிச்சயமாக படம்பிடித்துக் காட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *