செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

ஜெய்பூர்,நவ.30–

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜஸ்தான் மாநில பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வரி (வயது 59) சிகிச்சை பலன் அளிக்காமல் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். ராஜஸ்தானில் உள்ள ராஜ்சமந்த் தொகுதியில் தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏ.வாக கிரண் மகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மகேஸ்வரியின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநில சட்டமன்ற சபாநாயகர் சிபி ஜோஷி, பாஜக மாநிலத் தலைவர் சதீஷ் பூனியா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி ட்விட்ரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் பாரதீய ஜனதா எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும், ஏழைகள், விளிம்புநிலை மக்கள் முன்னேற்றத்துக்கும் ஏராளமானப் பணிகளை மகேஸ்வரி செய்துள்ளார். மகேஸ்வரியின் குடும்பத்தாருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி” எனத் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தபோது, கிரண் மகேஸ்வரி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *