டெல்லி,ஜன. 7-
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நல்ல மழை பெய்தது என்பதும் இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியதால் வரும் ஆண்டு கோடையில் தண்ணீர் கஷ்டம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கிட்டத்தட்ட அனைத்து நீர்நிலைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், தற்போது திடீரென மீண்டும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.