செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, பிப்.22–

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

வடக்கு கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய கடலோர பகுதிகளில்‌ வளிமண்டல மேலடுக்கில்‌ ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக, தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, வட தமிழகத்தில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

நாளை தமிழகத்தில்‌ மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு விவரம்:–

கடலூர்‌ ஆட்சியர்‌ அலுவலகம்‌ – 12 செ.மீ., திருத்தணி, சிவகிரி தலா 7 செ.மீ., போளூர், வானூர் தலா 5 செ.மீ., புதுச்சேரி, சீர்காழி, காரைக்கால் தலா 4 செ.மீ., மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, கோத்தகிரி தலா 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *