செய்திகள்

தமிழகத்தில் 11–ந்தேதி வரை மழை நீட்டிக்கும்

சென்னை, ஜன. 7–

தமிழகத்தில் 11–ந்தேதி வரை மேலும் 4 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்‌ ராமநாதபுரம்‌, தூத்துக்குடி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சிவகங்கை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ராமநாதபுரம்‌, தூத்துக்குடி நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, புதுக்கோட்டை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ 9–ந்தேதி இடியுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ராமநாதபுரம்‌, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர்‌ மாவட்டங்களில்‌ 10–ந்தேதி ஓரிரு இடங்களில்‌ இடியுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, விழுப்புரம்‌, திருநெல்வேலி மற்றும்‌ புதுச்சேரியில்‌ கனமழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

ராமநாதபுரம்‌, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர்‌, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, கடலூர்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌, விழுப்புரம்‌, திருநெல்வேலி மற்றும்‌ புதுச்சேரியில்‌ 11–ந்தேதி இடியுடன்‌ கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னை மற்றும்‌ புறநகர்‌ பகுதிகளைப்‌ பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழை அளவு விவரம் வருமாறு:– மே.மாத்தூர்‌, நத்தம்‌ தலா 21 செ.மீ மழையும், ரிஷிவந்தியம்‌, தியாக துருகம் – 19 செ.மீ., வேப்பூர்‌– 18 செ.மீ., வரகாவூர், கலயநல்லூர்‌ –16 செ.மீ., கள்ளக்குறிச்சி, சங்கராபுரம்‌ – 15 செ.மீ., பீளமேடு, குடவாசல்‌ தலா 11 செ.மீ., பூந்தமல்லி – 10 செ.மீ., அரூர்‌, கோவை தெற்கு, அகரம்‌ சிகூர்‌, ஜெயன்கொண்டாம்‌, ராஜபாளையம்‌, ஆண்டிபட்டி தலா 9 செ.மீ., திருவிடைமருதூர்‌, தம்மம்பட்டி, விழுப்புரம்‌ தலா 8 செ.மீ., புதுச்சேரி, பூண்டி, அரவக்குறிச்சி தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *