செய்திகள்

ஐசிசி பிப்ரவரி மாத விருது: அஸ்வின் சிறந்த வீரராக தேர்வு

துபாய், மார்ச் 10–

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இருந்து ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி. வாக்கு அகாடமி (முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர் அடங்கிய கமிட்டி) ஆகியோர் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அதிக ஆதரவு பெற்ற தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அஸ்வின் பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்டில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, ஒரு சதமும் அடித்ததால் அவர் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல் இங்கிலாந்தின் டேமி பியூமௌன்ட் சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றார்.

ஜனவரி மாதத்தில் ஐசிசியின் சிறந்த வீரர் விருதை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ரிஷப் பந்த் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *