சினிமா

5 பிரபல இயக்குனர்கள் இயக்கிய 5 கதைகளுடன் ‘புத்தம் புது காலை’: அமேசான் பிரைம் தயாரித்த படம் 16ந் தேதி வெளியீடு

சென்னை, அக். 9

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான 5 இயக்குனர்களான – சுதா கொங்கரா, கவுதம் மேனன், சுகாசினி மணிரத்னம், ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரை ஒன்றிணைத்த அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் இந்திய 5 கதைகளின் சிறப்பு தொகுப்பு திரைப்படமான ‘‘புத்தம் புது காலை’’, இம்மாதம் 16ந் தேதி 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது.

இந்த தொகுப்பில் உள்ள 5 குறும்படங்கள்: இளமை இதோ இதோ – படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார் (உத்தம வில்லன்). காளிதாஸ் ஜெயராம் மற்றும் ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளனர்.

அவரும் நானும் / அவளும் நானும் படம் – கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியத்தில். எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ரீத்து வர்மா நடிக்கின்றனர்.

‘காபி, எனி ஒன்’? – சுகாசினி மணி ரத்னம் இயக்கி நடிக்க அவருடன் இணைந்து அனு ஹாசன், ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளனர்.

‘ரீயூனியன் படம் ராஜீவ் மேனன் இயக்கத்தில், ஆண்டிரியா, லீலா சாம்சன் மற்றும் சிக்கில் குருச்சரன் நடிக்கின்றனர்.

மிராக்கிள், கார்த்திக் சுப்புராஜ் (பேட்டை) இயக்கத்தில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் (பட்டாஸ்) ஆகியோர் நடிக்கின்றனர்.

இத்திரைப்படங்கள் உயிர்க்கொல்லி கொரோனா ஊரடங்கு தளர்வின் போது படப்பிடிப்பிற்காக தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனம் வகுத்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி படமாக்கப்பட்டது.

தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது பற்றி அறிய www.amazon.in/prime வலைதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *