செய்திகள்

கபாடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை: ஆர்.வி.ரஞ்சித்குமார் வழங்கினார்

காஞ்சீபுரம், ஜன.29–-

தமிழ்நாட்டில் அம்மாவின் அரசு விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று காஞ்சீபுரம் அருகே மாநில அளவில் நடந்த கபாடி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் – கோப்பையை வழங்கி, காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசினார்.

காஞ்சீபுரம் அருகே தாமல் கிராமத்தில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்தது. அதனை கொண்டாடும் விதமாக மாநில அளவிலான கபாடி போட்டிகள் தாமல் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டிகளில் கூத்திரமேடு ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்று முதல் பரிசாக ரூ. 25,000, மற்றும் 6 அடி உயர கோப்பையை வென்றது. 2-வது பரிசாக ரூ.20,000 மற்றும் 5 அடி கோப்பையை தாமல் பி.ஆர்.எ ஸ்போர்ட்ஸ் கிளப் வெற்றி பெற்றது. 3-வது பரிசாக ரூ.15,000 மற்றும் 4 அடி கோப்பையை ஜெய்பீம் உத்திரம்பட்டு அணியும், 4-வது பரிசாக தாமல் அம்பேத்கர் அணி ரூ.10,000 மற்றும் 3 அடி கோப்பையை வென்றது. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும், தனது சொந்த செலவில் ரொக்கப்பணத்தையும், கோப்பைகளையும் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் வழங்கி விளையாட்டு வீரர்களை ஊக்குவித்தார்.

விளையாட்டு வீரர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் நன்றியை தெரிவித்தனர்.

பிறகு ஆர்.வி.ரஞ்சித்குமார் பேசியதாவது:

அம்மாவின் ஆட்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள் சாதனை படைக்க இந்த அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு பரிசாக காரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கி அவர்களை ஊக்குவித்தார். இதைப்போல எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செய்து வருகிறது என்றால் அது மிகையாகாது. மேலும், தமிழ் தொண்டாற்றி வரும் தமிழ் அறிஞர்களுக்கு அம்மாவின் அரசு தொடர்ந்து விருதுகளை வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அம்மாவின் அரசு அனுமதித்ததில்லை. பொங்கல் பரிசாக இந்த அரசு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 மற்றும் பொங்கல் தொகுப்பு பரிசை வழங்கியுள்ளது. இதுவரை எந்த அரசும் செய்யாத இந்த சாதனைகளை தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மக்கள் நலனை சிந்தித்து செயலாற்றி வருகிறார்கள்.

ஆளுமை மிக்க சிறந்த நிர்வாக திறமைக்கு இந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பொது சுகாதாரம், நீதி, சட்டம், ஒழுங்கு, விவசாயம், தொழில் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் முதன்மை பெற்று மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை ஆய்வில் தமிழகம் நெ.1 மாநிலம் என மத்திய அரசின் சான்றிதழ் பெற்றுள்ளது என்றால் மக்கள் விரும்பும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கும் இந்த நேரத்தில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் தாமல் உடற்கல்வி ஆசிரியர் எ.ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *