வர்த்தகம்

ஒலி வடிவில் பிரதாப முதலியார் நாவல் ‘‘ஸ்டோரிடெல்’’ அறிமுகம்

சென்னை, பிப். 8–

தமிழ் இலக்கியமான பிரதாப முதலியார் சரித்திரத்தை ஒலி வடிவில் ‘‘ஸ்டோரிடெல்’’ அறிமுகப்படுத்தியுள்ளது. நவீன தமிழ் இலக்கிய நாவலாசிரியராக அறியப்படும் சாமுவேல் வேதநாயகம் பிள்ளை, 1857ல் எழுதிய நாவல் ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ ஆகும். தமிழ் இலக்கியத்தின் மைகல்கல்லாக கருதப்படும் இந்நூல், மொழியின் முக்கிய அங்கமாக ‘புதினம்’ என்னும் இலக்கிய நடை அங்கீகரிக்கப்பட பாதை வகுத்துத் தந்தது.

இந்நூலின் பாரம்பரியப் பெருமையைக் கருத்தில் கொண்டு, இலக்கிய ஆர்வமுள்ள அனைவரிடமும் எடுத்துச் செல்ல, ஸ்டோரிடெல் இதை ஒலிப் புத்தகமாக மாற்றியுள்ளது. இந்நூலை ஒலி வடிவமாக வழங்குபவர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர், எம். அருணாசலம் ஆவார்.

இந்தப் புதினம் அதிக அனுபவமில்லாத ஆனால் நல்ல உள்ளம் படைத்த கதாநாயகனின் வாழ்க்கையையும், சாகசங்களையும் உள்ளடக்கிய பல்வேறு நிகழ்வுகள் மற்றும் சம்பவங்களின் தொகுப்பாகும்.

இது குறித்து ஸ்டோரிடெல் மேலாளர் யோகேஷ் தசரத் கூறுகையில், இன்றைய சூழலுக்கும் ஏற்றத் தரமான இலக்கியமாகத் திகழும் இப்புதினம் பல மக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். இந்த மகத்தான புதினம் பற்றி நாங்கள் பெருமகிழ்ச்சி அடைவதுடன் அனைவருக்காகவும் ஸ்டோரிடெல்லில் ஒலிப் புத்தகமாக பதிவு செய்துள்ளோம் என்றார்.

தமிழ் புத்தகத்துக்கான இணைப்பு www.storytel.com வலைதளத்தில் பார்க்கலாம்.

சந்தாதாரர்களுக்கு முதல் 14 நாட்கள் இலவசம். அதற்கு பிறகு ரூ.299 சந்தாத் தொகையாகும். மாதாந்திர சந்தா பிரிவில் சந்தாதாரர்கள் 9 மொழிகளில் (தமிழ், ஆங்கிலம், இந்தி, மராத்தி, உருது, பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்) அளவற்ற கதைகளுக்கான இணைப்பை பெறலாம்.

கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஐஓஎஸ் செயலி ஸ்டோர் ஆகியவற்றில் ஸ்டோரிடெல் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *